நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.!

Photo of author

By Hasini

நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.!

நேர்முகத் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரன் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,

தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதிகள்
7 (நாளை) மற்றும் 8-ந்தேதி- (நாகர்கோவில், நெல்லை தேர்வர்கள்) – நாகர்கோவில் மையம்
9-ந்தேதி- (மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர்) – மதுரை மையம்
12 மற்றும் 13-ந்தேதி- (கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல்) – கோவை மையம்
15-ந்தேதி – (கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி) – கிருஷ்ணகிரி மையம்.
16-ந்தேதி- (வேலூர், திருவண்ணாமலை, கடலூர்) – வேலூர் மையம்
17-ந்தேதி- (திருவள்ளூர், காஞ்சீபுரம்) – திருவள்ளூர் மையம்
26 மற்றும் 27-ந்தேதி- (சென்னை, டெல்லி) – சென்னை

துறை தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தேர்வாணையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு( நேர்முகத் தேர்வு ) கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

இந்த நிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து நேர்முகத்தேர்வுக்கு ட அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு குறுந்தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான குறிப்பாணை தேர்வாணையத்தின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.