நாடு முழுவதும் நோய்த்தொற்று இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் பரிதாபமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள்.
இதனையடுத்து தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் அலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது, இதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்திருக்கிறது. இதனையடுத்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது இந்த கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து ஆக்ஸிஜன் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.
இந்த சூழ்நிலையில், இரவு பகல் பாராமல் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவுபெற்று சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜனை வெளியில் கொண்டு வருவதற்கு வசதியாக டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிகிறது. நேற்று இரவில் ஆலையில் உற்பத்தி ஆரம்பமானது.
இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்ஸிஜன் வினியோகம் ஆரம்பமாகியிருக்கிறது டேங்கர் லாரிகள் மூலமாக ஆக்சிஜன் வினியோகம் செய்யும் வேலையை கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். தலைநகர் சென்னை மற்றும் கோவை போன்ற மாவட்டங்களுக்கு 2 டேங்கர் லாரிகள் மூலமாக ஆக்சிஜன் வினியோகம் ஆரம்பித்திருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் காப்பர் தயார் செய்வதால் அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இதனை தொடர்ந்து தமிழக அரசு அந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.