பதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Photo of author

By Sakthi

பதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Sakthi

தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் 4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அவை நியாய வகைகளை நடத்துவதுடன் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வேளாண் இடுபொருட்களை வழங்குகின்றன.

ஒவ்வொரு சங்கமும் தல ஒரு செயலரின் கீழ் செயல்படுகின்றன. அவருக்கு கீழ் உதவி செயலாளர் போன்ற பதவிகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் செயலாளர் மட்டும் வேறு சங்கத்திற்கு இடமாற்றம் செய்ய விதிகள் இருக்கின்றன மற்றவர்களை இடமாறுதல் செய்ய முடியாது.

ஆகவே உதவி செயலாளராக பணிபுரியும் பலர் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து பழைய இடத்திலேயே பணியாற்றி வருகிறார்கள். இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, உதவி செயலாளர் பதவி உயர்வை ஏற்க மறுப்பதால் மற்றவர்களின் பதவி உயர்வை தடுக்கிறார்கள்.

ஆகவே சங்கத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் பாதிப்புக்குள் ஆகிறது இந்த சிக்கலை தவிர்ப்பதற்கு எந்த ஒரு உதவி செயலாளரும் தன்னுடைய பதவி உயர்வை மறுத்தால் அதே சங்கத்தில் தொடர அனுமதிக்க கூடாது என்றும், அவர் மற்ற சங்கத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

பதவி உயர்வை மறுத்த உதவி செயலாளர் பொறுப்புச் செயலாளராக பணியாற்ற அனுமதிக்க கூடாது. உதவி செயலாளர்கள் மற்ற சங்கத்திற்கு மாற்றப்பட்டதும் மற்ற ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார் என்று சொல்லப்படுகிறது.