30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

Photo of author

By Janani

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

Janani

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டே சென்றாலும் ஜாதகம் மற்றும் தோஷங்களால் பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டும் அல்லவா..?

ஜாதக கட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிந்திப்பவர்களுக்கு தெளிவான விளக்கத்தை தரக்கூடிய பதிவு தான் இது.

உங்களுடைய குடும்பத்தில் உங்களுடைய வம்சாவழியில், உங்களது முன்னோர்களோ அல்லது நீங்களோ அடுத்தவர்களின் சொத்தை அனுபவித்தால், அந்த சொத்தை நீங்கள் ஆண்டு அனுபவித்து வந்தால், உங்களுடைய வம்சத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

அதாவது உடன் பிறந்தவர்களின் சொத்தையும் சேர்த்து ஒருவரே அனுபவிப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கோ, பங்காளிகளுக்கோ சொத்தை பிரித்துக் கொடுத்திருக்க மாட்டார்கள். இரண்டாவதாக வாரிசு இல்லாத சொத்தை அனுபவிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுடைய வாரிசுக்கு திருமணம் தடைபடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோன்று கோவில் சொத்தை அபகரித்தவர்களது வாரிசுகளுக்கும் திருமணம் தடைபடும். ஆக இப்படிப்பட்ட தவறினை நீங்களோ அல்லது உங்களது முன் சந்ததியினரோ செய்திருந்தால் நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுக்கு திருமணம் நடப்பதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.இப்படிப்பட்ட சிக்கலை சுலபமான வழியில் தீர்ப்பதற்கு பரிகாரமும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று 11 நெய் தீபங்கள் ஏற்றி, அங்கு உள்ள குருக்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உளுந்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த முருகப்பெருமானுக்கு நீர் மோரை நிவேதனமாக வைத்து முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு, அந்த நீர் மோரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இது ஒரு பரிகாரம்.

இரண்டாவதாக உங்களுக்கு பிரச்சனை எதில் உள்ளது என்பதே தெரியவில்லை, ஆனால் திருமணம் மட்டும் தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது, வயது கடந்து கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் சித்திரகுப்தர் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று சித்திரகுப்தற்கு ஒரு வெள்ளிக்கிழமை அன்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும்.

பால் அபிஷேகத்தோடு சேர்த்து 7 விதமான பிரசாதங்களை நிவேதனமாக செய்து வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதோடு 7 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்(வெற்றிலை, பாக்கு, பூ, வாழைப்பழம், மஞ்சள் கிழங்கு). 7 பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.

மூன்றாவது பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான். இந்த பரிகாரத்திற்காக ஒரு புதிய கண்ணாடியை வாங்க வேண்டும். அந்தக் கண்ணாடியை திருமணத்திற்காக காத்திருப்பவரது கையால் வாங்கி வீட்டில் மாட்ட வேண்டும். அடுத்து அந்த கண்ணாடியில் முருகர் படத்தை ஒட்ட வேண்டும்.

இதற்கு ஒட்டக்கூடிய முருகர் படமானது ஆறுமுகமும் 12 கைகளையும் உடைய சண்முகநாதர் படத்தை தான் ஒட்ட வேண்டும். இதற்கு வேறு எந்த முருகர் படத்தையும் ஒட்டக்கூடாது, இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது திருமணம் ஆக வேண்டிய பெண்ணோ அல்லது ஆணோ இரவு தூங்குவதற்கு முன்பு கண்ணாடியில் ஒட்டி இருக்கும் முருகருக்கு முன்பு நின்று, தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும், மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பின் உறங்க செல்ல வேண்டும்.

இதே போல் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி 90 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் ஆகக்கூடிய யோகத்தை முருகப்பெருமான் அருள்வார் என்று சொல்லப்படுகிறது.

திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முருகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. நமது நம்பிக்கைக்கு உரிய ஒரு வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும்.