லியோ திரைப்படத்தின் கதை மாற்றப்பட்டது!!! தயாரிப்பாளர் லலித் குமார் கூறிய உண்மை!!! 

0
60
#image_title
லியோ திரைப்படத்தின் கதை மாற்றப்பட்டது!!! தயாரிப்பாளர் லலித் குமார் கூறிய உண்மை!!!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் கதை மாற்றப்பட்டது என்று லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே உலக அளவில் 148 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
லியோ திரைப்படம் வெளியான நிலையில் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் அவர்கள் நேர்காணல் ஒன்றில் லியோ திரைப்படத்தின் கதையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார்  அவர்கள் “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் முதலில் நடிகர் விஜய் அவர்களிடம் கதையை சொல்லி ஒகே செய்தார். அதன் பின்னர் என்னிடமும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் அவர்களிடமும் கதையை கூறினார். நாங்களும் சரி என்று கூறினோம்.
அதன் பின்னர் நான் நடிகர் விஜய் சாருக்கு கால் செய்து பேசினேன். கதையில் சில இடங்களில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். இதை நீங்கள் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
நடிகர் விஜய் அவர்களும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை அழைத்து கதையில் சில மாற்றங்களை செய்து தருமாறு கேட்டார். இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் பத்து நாட்கள் டைம் எடுத்துக் கொண்டு கதையில் சில மாற்றங்கள் செய்து கொண்டு வந்து கதை சொன்னார்” என்று லலித் குமார் அவர்கள் கூறினார்.
ஒரு வேளை கதையில் ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்கள் தான் லியோ திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தும் எதிர்மறை விமர்சனங்களை லியோ திரைப்படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று உள்ளது.