வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!

Photo of author

By Hasini

வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!

வவ்வால்களினால் கொரோனா வருகிறது

என்று ஒரு புறம் பயமுறுத்திய காலம் போய் தற்போது அவர்களுக்கு நண்பராகி கொண்டிருக்கும் காலம் வந்துவிட்டது போல. இந்த வவ்வால்களிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். அது இரவில் மட்டுமே வரும் என்பதன் காரணமாக அதை யாரும் வளர்க்கவும் செய்வதில்லை. ஆனால் இவர் ஒரு வினோத மனிதராக இருக்கிறார்.

இவர் விசில் அடித்தால் வவ்வால்கள் பறந்து வருகின்றன. புதுச்சேரி அருகே கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். கடலூர் சாலையில் இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு அவர் பலவித பழ மரங்களை வைத்திருந்தார். அதன் காரணமாக அங்கு அணில்கள், வவ்வால்கள் என தினமும் பல சிறு விலங்குகள் வந்து பழங்களை சாப்பிட்டு செல்வது வழக்கம் தான்.

ஆனால் சமீபத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவும், பலத்த காற்றின் காரணமாக அந்த பழ மரங்களெல்லாம் சாய்ந்து விட்டன. எனவே அங்கு வந்த வவ்வால்கள் சாப்பிட பழம் கிடைக்காமல் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்தது. இதை கவனித்து வந்த செந்தமரைகிருஷ்ணன் அதற்கென தனியாக வாழைப் பழங்களை வாங்கி வந்து சுவர் மற்றும் அவரது காரின் மீது பழங்களை வைத்துள்ளார்.

இதை வவ்வால்கள் தற்போது தினமும் சாப்பிட்டு செல்கின்றன. இந்த நிலையில் தனது கையில் வாழைப்பழத்தை வைத்து விசில் அடித்து வவ்வால்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலிருந்து அவர் விசில் சத்தம் கேட்டால் போதும், அவரது கையில் வாழைப் பழங்களை வைத்து வவ்வால்களை திசை திருப்பி அவர் பக்கம் இழுத்துள்ளார். அதன் காரணமாக விசில் சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் வவ்வால்கள் பறந்து வந்து விடுகின்றன.

மேலும் அவரது கையிலும் அவரது தலையிலும் அமர்ந்து கொள்கின்றன. அவர் மீது அமர்ந்து பழங்களை சாப்பிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காட்சியை செந்தாமரை கிருஷ்ணனின் நண்பரான ஒருவர் அவரது செல்போனில் வீடியோ படமாக எடுத்து வைத்துக்கொண்டார். அதை தற்போது அவர் வாட்ஸ்அப்பில் வெளியிட்டதன் காரணமாக அது தற்போது பரவி வருகிறது. அதன் காரணமாக அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.