கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா? 

Photo of author

By Hasini

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா?

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகெங்கிலும், உலக நாடுகளிலும், அனைத்திலும், பல விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ளது. எனவே தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிகிறோம்.முக கவசங்கள் பல வகைகளில் கிடைக்கிறது. மூலிகை முக கவசம்,  துணியால் ஆன முககவசம், பிளாஸ்டிக் முககவசம் என  பல வகை முககவசங்கள் கிடைத்தாலும், நம்மால் எது முடிகிறதோ  தங்கத்தில் கூட ஒருவர் முக கவசம் அணிந்து வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

முககவசங்கள் உடன் வைபை, புளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில்நுட்பங்கள் முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது  விஞ்ஞானிகள் ஓர் வித்தியாசமான தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீன முககவசம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

அந்த முககவசம் அணிந்தவரிடம் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியயும் ஒரு புதிய முககவசத்தை  மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இதன் சிறப்புகள் குறித்து நேச்சர்  பயோடெக்னாலஜி  பிரபல அறிவியல்  இதழின் கட்டுரையில் கூறயது இதுதான். பிரெஞ்சு விஞ்ஞானிகள் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளனர். அதன் மூலம் காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முககவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முககவசத்தை அணிந்து இருக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்படுமாம். இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் இல்லாமல் விரைவில் நகர்ந்து தப்பித்துக் செல்லலாம் எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாம் சாலையில் நடந்து செல்லும் போது நாம் சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளன. அதை நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியவை இவற்றை நுரையீரலுக்குள் நுழைவதை தடுக்கின்றன. கொரோனா வைரஸ் நுண் துகள்கள் வேகமாகப் பரவும் என்பதால் குறிப்பிட்ட ஒரு நபர் அணியும் முககவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இந்த முககவசத்தை உருவாக்கியுள்ளனர்.

காற்றில் மிதக்கும் வைரஸ் துகள்கள் இந்த சென்சாரில் பட்டவுடனேயே சென்சார்கள் இந்த வைரஸின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி எதுவும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நமது சருமத்தின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதாவது தூசி பட்ட உடனே அந்த இடத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது அல்லவா? அது போல இந்த சென்சார் கருவிகள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆரம்ப நிலை சோதனைகளில்  இந்த  முககவசம் மிக துல்லியமான முடிவுகளை அளித்துள்ளது. இது தற்போதைய பி.சி.ஆர் சோதனைகளுடன் ஒப்பிட தகுதியானதாக உள்ளது.

சென்சார்களை சோதனை செய்ய விரும்பினால், அதை அணியும் போது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இந்த முககவசம் அதை அணிபவர்களால் செயல்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயனர்களின் தனியுரிமைக்காக மூடியின் உட்புறத்தில் மட்டுமே முடிவுகள் காண்பிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.