உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்!

Photo of author

By Hasini

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்!

நாமெல்லாம் என்னதான் பகிர்ந்தாலும் சிலவற்றை பகிர்வதை ஒரு எல்லையை ஏற்படுத்தி விடுவோம். அதாவது எவ்வளவு சோசியல் ஆக இருந்தாலும் சிலவற்றை பகிர்வதை யோசிப்போம். அது அந்த பொருளின் மீது உள்ள ஆன்பினால் ஆகும்.

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு இருக்கும். இதை நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கலாம். அவர்களுக்குள் உருவ ஒற்றுமை, எண்ணங்களில் ஒற்றுமை என சில வகைகளில் ஒரே எண்ணம் இருக்கும்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் எல்லாவற்றையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு வினோத செயல் நிகழ்ந்து உள்ளது. அதாவது அங்கு உள்ள இரட்டையர்கள் ஒரே நபரையே காதலித்து அவரையே கரம் பிடிக்க உள்ளனர்.

அனா மற்றும் லூசி என்ற 35 வயதுடைய இரட்டை சகோதரிகள் ஒரே நபரை காதலித்து அவரையே திருமணம் செய்ய விருப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தனர். அந்த நபரின் பெயர் பென் எனவும், அவருக்கு 37 வயது எனவும் தெரிவித்தனர்.

அவர்களை ஒரு பார்க்கிற்கு அழைத்து சென்ற பென் அனா மற்றும் லூசியிடம் தனித்தனியாக இதை கூறி உள்ளார். அது என்னவென்றால் இந்த உலகிலேயே மிக முக்கியமானவள் என்றும், நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் உங்களின் மகிழ்சிக்காக நான் எல்லவற்றையும் செய்கிறேன் என்றும், இந்த மோதிரம் நமது இணைப்புக்கு சாட்சியாக இருக்கமா? எனவும் கூறி உள்ளார்.

அதற்கு அந்த இரட்டை சகோதரிகள், நாங்களும் உன்னை காதலிக்கிறோம் என்றும், உலகிலேயே மிக அதிர்ஷ்டசாலிகள் என்றும், எங்களுக்கு பிடித்தவரை எங்களுக்குள் பகிர்கிறோம் என்றும் அதில் மிகவும் மகிழ்வதாகவும் கூறினார்கள்.

ஆஸ்திரேலியாவில், ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்ய சட்டம் இல்லை என்பதால், வெளிநாட்டில் எங்காவது திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.