வலிமை பட வெளியீடு! அதிகாரபூர்வ அறிவிப்பு! அதுவும் ரசிகர்களின் ஆரவாரம்!

வலிமை பட வெளியீடு! அதிகாரபூர்வ அறிவிப்பு! அதுவும் ரசிகர்களின் ஆரவாரம்!

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் மற்றும் வேற மாதிரி என பாடத்தின் அனைத்தும் பயங்கர ஹிட் ஆயின. இவை அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனவே வலிமை திரைப்படம் வெளிவர ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருகின்றனர். இந்தப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியிடப் பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்த வருடம் திரையில் திரையிடப்படும் என  படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் உலா வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கில் நடித்து வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படம் வெளியாகும் தேதி வெளியானதன் காரணமாக நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும். இந்நிலையில் தற்போது வலிமை படம் வெளிவீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment