நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்?

Photo of author

By Hasini

நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்?

தற்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ் ஆகும்.இவர் சூப்பர் ஸ்டாரின் மகளை மணமுடித்து இருக்கிறார்.இவர் அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2003 ம் வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு தற்போது வரை வளர்த்து வரும் நடிகராக முன்னணி இடத்தில் உள்ளார்.மேலும் அசுரன்,கர்ணன் படங்களின் மூலம் மிக பிரபலமும்,மக்களிடம் நன்மதிப்பும் பெற்றுள்ளார்.தற்போது தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் நன்மதிப்பை பெறுகிறது.அவரது படங்கள் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்களின் கையிருப்பில் 8 முதல் 10 திரைப்படங்கள் உள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதில் முகவும் முக்கியமாக சத்யஜோதி பிலிம்சின் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி ராம்குமார் அவர்களின் ஒரு பாண்டஸி கதையில் தனுஷ் நடிப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றன.இந்த கதையை அவர் 2,3 வருடங்களாக எழுதி வருகிறார்.ராட்சசன் பட வெற்றியை பார்த்து துனுஷே இவரை நேரில் அழைத்து அவர் நடிக்கும் படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்.

ராட்சசன் 2 ம் பாகத்தின் கதையை அவர் ஏற்கனவே தயார் செய்து விட்டதாகவும் சொல்லும் விஷ்ணு விஷால், தனுஷிற்கு இடம் தராமல் தொடர்ந்து இவருடன் வேலை செய்திருந்தால், தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணி போல் இவருக்கும் அமைந்திருக்கும் என்றும், விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் பெரிதாக பெசபட்டிருக்கும் என்றும் தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களில் புலம்பி வருகிறார்.