இந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதோடு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 16ம் தேதி வரையில், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

வரும் 17ம் தேதி தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையில் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.