எலித் தொல்லை தாங்காமல் தாய் எடுத்த முடிவால் மாணவி பரிதாப பலி!

Photo of author

By Sakthi

எலித் தொல்லை தாங்காமல் தாய் எடுத்த முடிவால் மாணவி பரிதாப பலி!

Sakthi

கோயம்புத்தூர் மாவட்டம் நெகமம் அருகில் இருக்கின்ற செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேசி இவர்களுக்கு எனிமா ஜாக்குலின், பிராங்கிலின் உள்ளிட்ட 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் எனிமா ஜாக்குலின் பிகாம் 3ம் வருடம் படித்து வந்தார், கிரேசி அம்மா செங்ககுட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றார். கடைக்கு பின்புறமாக அவர்களுடைய வீடு இருக்கிறது.

வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக கேரட்டில் விஷ மருந்து தடவி கிரேசி வைத்திருக்கிறார். இதை கவனிக்காத எனிமா ஜாக்குலின் அதனை சாப்பிட்டுவிட்டார்.

உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.