மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0
55

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். முதலில் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் மூலம் தங்களுடைய சேமிப்பு கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்கிறதா என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி. அதன் பிறகு அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Next articleமாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?