பிளஸ் 2 மாணவர்களே உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

0
179

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் இணைவதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் பயன்பெறும் விதத்தில் இலவசக் கல்வித் திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர் வரும் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் இணைவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதாரத்தினடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்யும் போது உரிய ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகள்ளக்காதலை தட்டி கேட்ட சகோதரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு! சகோதரிகள் அதிரடி கைது!
Next articleவரும் 23ஆம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்! பொதுக்குழுவில் எடுக்கப்படும் அதிரடி முடிவு?