இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

Photo of author

By Pavithra

இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

 

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவலின் வீரியம் குறைந்த மாநிலங்களில் செப்டம்பர் மாதத்திலிருந்து,பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில்,தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சேலத்தில் பளிச்சென்ற அரசுப்பள்ளி மாணவி மற்றும் ஆசிரியருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று 2 தனியார் பள்ளிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பல பள்ளிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஓர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதவாறு மாணவ, மாணவிகளுக்கு சளி,இருமல், தலைவலி,போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல் நலனில் முழு நம்பிக்கையை கொண்டிருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு வேறு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின்படி பள்ளிக்கு வந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது நோய் தொற்று காலம் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.