மாணவ மாணவியருக்கு உதவி செய்யப்படும்!! நடிகர் விஜய் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

மாணவ மாணவியருக்கு உதவி செய்யப்படும்!! நடிகர் விஜய் அறிவிப்பு!!

Sakthi

Students will be helped!! Actor Vijay Announcement!!
மாணவ மாணவியருக்கு உதவி செய்யப்படும்!! நடிகர் விஜய் அறிவிப்பு!!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானதை அடுத்து நடிகர் விஜய் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 600க்கு 600 முழு மதிப்பெண்களையும் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பல கட்சித் தலைவருகளும் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் விளையாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மாணவி நந்தினியை அழைத்து நேரில் வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.
இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து வாழ்த்து தெரிவித்து பரிசளிக்கவுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் விவரங்களை எடுக்க மக்கள் மன்றத்தினரிடம் நடிகர் விஜய் கூறியுள்ளார். இதே போல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் அவர்கள் பாராட்டி பரிசளிக்கவுள்ளார்.