
DMK BJP: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் திமுக, அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக இரண்டு கட்சிகளும், தேர்தல் பிரச்சாரங்களையும், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இவர்களை முறியடிக்க நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அண்மையில் தவெக நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழு பலரின் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இது குறித்து சாடியிருந்தார். அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ஒட்டுண்ணி பாஜக, கரூர் நெரிசலை பயன்படுத்தி யாரை தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. நிச்சயம் 200 இடங்களை வெல்வோம் என்று ஸ்டாலின் கூறிவந்தார். ஆனால் தற்போது அவர் பேச்சில் பயமும், தடுமாற்றமும் தெரிகிறது. திமுக இது வரை தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை, யாராவது ஒருவரின் தயவை நாடியே திமுக வென்றுள்ளது. ஆனால் பாஜக அப்படி இல்லை.
1996 ஆண்டிலேயே தனித்து போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்தது என்றும் கூறினார். பாஜகவின் தேர்தல் வரலாறு பலமாக இருக்கும் பட்சத்தில் திமுக இதனை விமர்சிப்பது தான் வேடிக்கையாக உள்ளது என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததை கண்டு முதலமைச்சருக்கு பயன் வந்து விட்டது என்றும், அந்த தோல்வி பயத்தால் தான் பாஜகவை கடுமையாக குறை கூறி வருகிறார் என்றும் கூறினார்.