அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

0
141

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. சில தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் கூட பல நாட்களில் இந்த விலை உயர்வு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய தினத்தில் இருந்து சற்றே உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் ஆறு காசுக்கும், டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 11 காசுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்று 95 ரூபாய் கடந்திருக்கிறது .

Previous articleதிமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!
Next articleடேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!