ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு?

Photo of author

By Pavithra

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் தீ விபத்து குறித்து ஆரம்ப கட்டத்திலேயே தெரியவில்லை.இதனால் தீ ஏடிஎம் அறை முழுவதும் மளமளவென பரவியது.ஏடிஎம் மையத்தின் முழுவதும் தீ பரவிய பின்னரே அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருந்தபோதிலும் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஏடிஎம் மெஷின் முழுவதும் தீயில் கருகி நாசமாயின.ஏடிஎம் முழுவதும் எரிந்ததால் அதிலிருந்த பணம் எவ்வளவு என்று தெரியவில்லை.வங்கி அதிகாரிகள் வந்த பின்னரே ஏடிஎம் மிஷினில் வைக்கப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு தெரியும் என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்யப்பட்ட பொழுது மின் கசிவினால் திடீர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேல்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.