பொடுகுத் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்போ இந்த மூன்று வழிகள் உங்களுக்குத்தான்!
ஒரு சிலருக்கு என்னதான் தலைக்கு தினமும் குளித்தாலும் தலைக்கு உயர்தர வகையான ஷேம்புகள் போட்டாலும் பொடுகு என்பது போகாது. இந்த பொடுகால் நம் தலையில் பல பிரச்சனைகள் வரக்கூடும். பொடுகு வந்துவிட்டால் ஒரு சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பொழுது பொடுகு உடனே போக வேண்டும் என்பதற்தாக கெமிக்கல் அதிகம் உள்ள ஷேம்புகள், ஆயில்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்த ஷேம்புகள், ஆயில்கள் அனைத்தும் உடனே நல்ல தீர்வை தரும். இருந்தும் கூடவே பின்விளைகளையும் சேர்த்துத் தரும். இதனால் பின்விளைவுகள் இல்லாமல் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எளிமையான மூன்று வழிமுறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் மூன்று மருத்துவக் குறிப்புகள்:
1. பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முடியின் வேர்காலில் தேய்த்து உச்சந்தலையை மசாஜ் செய்துவிட்டு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும். பின்னர் தலையை ஹேர் வாஷ் செய்யலாம். இவ்வாறு செய்து வந்தால் பொடுகும் அழிந்து போகும். தலைமுடிக்கு ஊட்டச் சத்தும் கிடைக்கும்.
2. வெயில் காலங்களில் அதிகம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் தயிர் நம்முடைய தலைமுடிக்கும் பல வித நன்மைகளை கொடுக்கும். இந்த தயிரை சாதாரணமாக எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான தண்ணீரால் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பொடுகுத் தொல்லை மறையும்.
3. பல விதமான நோய்களுக்கும் மருந்துப் பொருளாக பயன்படும் வேப்பிலையை வைத்தும் நாம் நம்முடைய தலையில் பொடுகை அழிக்கலாம். முதலில் வேப்பிலையை நன்கு அரைத்து அதை தலை முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.