உலகையே உலுக்கி வரும் கொரோனாத் தொற்றுக்கு இதுவரை இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் நம்மை தொற்றிலிருந்து இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே சிறப்பு மருந்து நம் உடலின் ஆரோக்கியத்தையும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பது மட்டுமே. இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
தமிழ்நாட்டில் கபசுர குடிநீர் தரப்படுகிறது.
கபசுர குடிநீர் நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருந்தபோதிலும் கபசுரக் குடிநீர் மட்டுமின்றி ஆயுர்வேத முறைப்படியும், யோகா பயிற்சிகள் மூலமாகவும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மொட்டைமாடி சூரிய எண்ணெய்க் குளியல் உள்ளிட்ட பல ஆயுர்வேத முறைகளின் படி சிகிச்சை அளித்து அசத்தி வருகிறது சேலம் அரசு மருத்துவமனை.
சேலத்தில் இதுவரையில் 268 பேர் குணமடைந்த நிலையில், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்நோயாளிகளுக்கு நாள்தோறும் காலையில் யோகா பயிற்சி கொடுக்கப்படுவதோடு வாரம் ஒருமுறை மருத்துவமனையின் மொட்டை மாடியில், சூரிய ஒளியில் எண்ணெய் தேய்த்து சிறது நேரம் சூரிய ஒளியில் இருக்க செய்து பின்பு அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குளியல் அறையில் குளிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
கபசுர குடிநீர் மட்டுமன்றி நோயாளிகளுக்கு கொய்யா, நெல்லி போன்ற பல்வேறு பழ வகைகளும்,முட்டை கொண்டைக்கடலை மீன் போன்ற சத்தான உணவுப் பொருட்களும் நாள்தோறும் அசத்தி வருகிறது சேலம் அரசு மருத்துவமனை.