ஆடி அமாவாசை அன்று சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி தரிசனத்திற்கு தடை

Photo of author

By Pavithra

வருடம் வருடம் ஆடி அமைவாசை அன்று சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் திருவிழா மிக பிரசித்தியாக நடக்கும். ஆனால் கொரோனாத் தொற்றின் காரணமாக வரும் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பொது மக்கள் கூட்டம் கூடினால் தொற்றின் பரவுதலின் வீரியம் அதிகரிக்கக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை கட்டுபடுத்தும் நோக்கில் ஆடி அமாவாசையன்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாணிப்பாறை, மாவூத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31-ம் தேதி வரை பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். என்றும்,இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.