தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இனி எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்!

Photo of author

By Sakthi

கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் வீடில்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்படவிருக்கிறது தமிழக நிதிநிலை அறிக்கையில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு அரசு மானியம் வழங்க 499.227 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் பசுமை வீடு திட்டத்தின் முதல் கட்டமாக 299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலமாக பட்டியலின மக்களுக்கு 1.1 லட்சம் மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு 300000 மானியத்தில் 8,803 வீடுகளும், கட்டப்படவுள்ளது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.