மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இவர்களுக்கு மட்டும் வட்டியில்லாத வீட்டுக்கடன்!

Photo of author

By Sakthi

மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இவர்களுக்கு மட்டும் வட்டியில்லாத வீட்டுக்கடன்!

Sakthi

தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் விதத்தில் சுய தொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநில அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வட்டியில்லா கடனை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வட்டித் தொகை முழுவதையும் மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அவர்களின் கடிதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வட்டியில்லாத கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன் பெறும் வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட தங்களுடைய மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் பயன்பெற போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.