அமேசான் வழங்கும் சூப்பரான வாய்ப்பு!! பணம் சம்பாதிக்க பெரிய முதலீடு தேவை இல்லை!!

Photo of author

By Preethi

அமேசான் வழங்கும் சூப்பரான வாய்ப்பு!! பணம் சம்பாதிக்க பெரிய முதலீடு தேவை இல்லை!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பலரும் வேலையை இழந்து தவித்து வரும் நிலையில்  அமேசான் நிறுவனம் சூப்பரான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் சைடு பிசினஸ்  செய்ய விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த கொரோனா காலகட்டத்தில் இ-காமர்ஸ் தொழில் துறை அதாவது அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சேவை துறை கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே, அமேசான் போன்ற  நிறுவனங்கள் தங்களது ஃப்ரான்சைஸை  வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.

இதனால், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் முதலீடு செய்து ஃப்ரான்சைஸ் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். பொதுவாக ஃப்ரான்சைஸ் பெற வேண்டுமெனில் நிறைய முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அமேசான் ஃப்ரான்சைஸுக்கு செலவுகள் குறைவு. பொருட்களை சேமித்து வைக்க இடம் இருந்தால் மட்டும் போதும்.

பொருட்களை சேமித்து வைக்கும் அளவுக்கு இடம் அல்லது கிடங்கு இருந்தால் நீங்களும் அமேசான் ஃப்ரான்சைஸ் பெற்று சம்பாதிக்க முடியும். ஒவ்வொரு பொருட்களின் டெலிவரிக்கும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். எக்ஸ்ட்ரா வருமானம் பெற விரும்புவோருக்கும் இதுவொரு நல்ல வாய்ப்பு. அமேசான் ஃப்ரான்சைஸில் இணைய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இருப்பினும், இத்திட்டத்தில் இணைய ஒரு ஸ்மார்ட்போனும், இரு சக்கர வாகனமும் தேவை. இதுபோக, பொருட்களை சேமிக்க தேவையான இடம் இருந்தால் போதும்.