சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு! படுகாயம் அடைத்த 13 பேர்! ஒருவர் பலி!

Photo of author

By Hasini

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு! படுகாயம் அடைத்த 13 பேர்! ஒருவர் பலி!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மெம்பிசின் என்ற கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் என்றும், மேலும் 13 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து உள்ளே உயிருக்கு பயந்து மறைந்திருந்த பொதுமக்களையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்து விட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அதன் காரணமாக அவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கூறப்படுகிறது. குறைந்த பட்சம் 12 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்கள் என்றும், ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் அளவு மிக தீவிரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.