ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

Photo of author

By Sakthi

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

Sakthi

Updated on:

 

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…

 

இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து தனது நண்பர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு புறப்பட்டார்.

 

முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு பயணம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் இமயமலையை ஒட்டியுள்ள ஆன்மீக தலங்களுக்கு நடந்து சென்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வழிபாடு நடத்தினார். பின்னர்.பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆகஸ்ட்16) சென்றார். பின்னர் ராஜ்பவனில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில் “நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வருகை தந்துள்ள என்னுடைய அன்பு நண்பரும் இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நேற்று(ஆகஸ்ட்16) மரியாதை நிமித்தமாக இராஜ்பவனில் சந்தித்து பேசினேன். ஜார்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நான் வரவேற்றேன்” என்று ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.