உடல் நிலைக்குறைவால் மருத்துவமனையில் உள்ள தனது ரசிகன் குணமடைய ஆடியோ பதிவு ஒன்றை வெளியீட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் தீவிர ரசிகரான பொள்ளாச்சியை சேர்ந்த திரு இளங்கோ என்பவர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளங்கோவின் மகள்
தனது “x” வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார்.
அப் பதிவில் எனது தந்தை உடல் நலக் குறைவால் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிரார். அவர் தனது வாழ்நாளில் பாதியை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகவே அர்ப்பணித்தவர் என்றும் . என் தந்தை குணமடைய ரஜனி அவர்கள் சிறிய குறிப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் என் தந்தையின் ஆசை என உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்த உருக்கமான பதிவு நடிகர் ரஜினியை சென்றடைய இதை கேட்ட அவர் என் அன்பு ரசிகரான இளங்கோ, தங்கள் பூரன குணமடைய வேண்டும், விரைவில் நலமுடன் வீடு திரும்புவிர்கள் எல்லாமல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறி “ஐ லவ் யு இளங்கோ” என்ற ஆடியோ பதிவை வெளியீட்டார் ரஜினி காந்த்.