ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா தலைமை வகித்த போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வரான இவர், சில மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரை தொடர்ந்து சசிகலாவின் ஆதரவால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.
இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். அப்போது பாஜகவில் இணைந்தார். அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இவர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவார் என்ற விவாதங்கள் வலு பெற்று வந்தது.
ஆனால் அதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும், ஏனென்றால் அந்த கூட்டணி தான் உறுதியாக உள்ளது என்று கூறிய ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு அடித்தளமிட்டார். இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் கிருத்திகா, நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். ஓபிஸ் அணியிலிருக்கும் பலரும் கட்சி மாறி வருவதால் ஓபிஎஸ் தற்போது பலவீனமடைவதாக உணர்கிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

