Ration Card: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு கொடுக்க தொடங்கியதில் இருந்து புதிய ரேஷன் கார்டு வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஏனென்றால் விண்ணப்பதாரர்கள் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்கி உள்ளார்களா என அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பிறகு தான் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு நம் தமிழக அரசு ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அப்படி ரேஷன் கார்டு வந்தவுடன் பொருட்கள் வாங்க முடியாது என தெரிவித்துள்ளது.
அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பிறகு அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும், அதுவரை பொருட்கள் கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும் புதிய ரேசன் கார்டுகளை வழங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது இந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் விடுபட்ட அனைவருக்கும் ரேஷன் கார்டு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.