ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Photo of author

By Jeevitha

ஒருவர் எந்த உயரமான பதவியில் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் தான். அந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நியமனம் பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் என்பவர் எந்த ஒரு குழந்தையும் பற்றி தெரியாமல் அனைவரும் சமம் என அமர்த்தி, அந்த குழந்தை எப்படி படித்தால் அவர் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிந்து அந்த குழந்தைகளை படிக்க வைப்பார். மேலும் ஆசிரியர் பணியே அறப்பணி என கூறுவார். இந்த நிலையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிப்பவர் தான் ஆசிரியர்கள்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் இருப்பதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,600 கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அறிந்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி திறனுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என 2026 ஆம் ஆண்டிற்குள் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் 3,000  ஆசிரியர்களுக்கு தமிழக முதலமைச்சர் பணி நியமனம் வழங்குவார் என தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பது ஆகும்.