ரேஷன் கடைகளில் தமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ்!! இந்த ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

RATION SHOP: நம் தமிழக அரசு தீபாவளி காரணமாக கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் ரூ.20 கோடிக்கு பட்டாசு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் 15 வகையான மளிகை பொருட்கள் அமுதம் பிளஸ் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் வெளி சந்தையில் விற்கும் மதிப்பை விட இங்கு குறைவாக இருப்பதால் சந்தோஷத்தில் உள்ளார்கள். அது மட்டும் அல்லாமல் இப்போது புதிய அம்சத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை “தீபாவளி கொண்டாட்டம்” என்ற பெயரில் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதற்கு காரணம் குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

வருடந்தோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது. அதே போல் இந்த வருடமும் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பட்டாசு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என தமிழக அரசு எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் மளிகை பொருட்களும் மிக குறைந்த விலையில் கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொள்ளலாம் என நம் தமிழக அரசு அறிவித்துள்ளது.