நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

0
201
#image_title

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!

 

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

 

சென்னை மாநகராட்சியில் மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது.

 

இதற்கு மத்தியில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு செய்தார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் “சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது. அதன்படி 144 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 84 மோட்டார்களும், மண்டலங்களில் 342 மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளது.

 

மழைநீர் வடிகால், நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை தூர்வாரும் பணிகள் தண்ணீர் சென்றடையும் அதாவது முடியும் பகுதியில் இருந்து தூர்வார அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாம்பலம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 33 கால்வாய்கள் 53 கி.மீ நீளத்திற்கு உள்ளது. இந்த கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது.

 

ஆனால் கால்வாய்கள் தூர்வார்பட்ட பின்னரும் பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்டுவதால் மழைகாலங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாம் கொட்டும் குப்பை சிறிய அளவுதானே இதனால் என்ன வந்துவிடப் போகிறது என்று மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. இது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்.

 

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 700 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்களின் செயல்பாடுகளை 24 மணி நேரமும் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆற்றலுடன் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் 69 வெள்ள தடுப்பு எச்சரிக்கை கருவிகளும், 18 இடங்களில் சுற்றுச் சூழல் மாசு கருவிகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தற்போது நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

 

மாநகராட்சியில் 11516 சாலைகளில் 2623 கிமீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கள் உள்ளன. அனைத்து சாலைகளுக்கும் மழைநீர் வடிகால் தேவைப்படாது. தற்போது 232 கோடி ரூபாய் செலவில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

 

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் எதிர்புறத்தில் உள்ள கால்வாயில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதைப் போல விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணிகளும் தொடங்கப்படவுள்ளது.

 

தங்கள் அருகில் கீழே  விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் மரங்கள் இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சி ஊழியர்கள் உடனே மரங்களை அகற்றி விடுவார்கள்” என்று கூறினார்.

 

Previous articleடிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!
Next articleதளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?