சூர்யா ஜோதிகா உதயநிதி ஸ்டாலினுக்கு உலக அளவில் கிடைத்த பெருமை!

Photo of author

By Sakthi

மனித சமுதாயங்களை வகைப்படுத்துவதில் சரியான பங்களிப்பை வழங்கி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலக அளவிலான சமுதாய ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் 11வது நாடாளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு உரிய நான்கு பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனிகே டெவிஸ் வெளியிட்டிருக்கிறார்.

இதில் ஜெய்பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு 2021ம் வருடத்திற்கான மதிப்புமிகு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மை கதையை மையமாக வைத்து சமூகநீதியை முன்னிறுத்தி வெளியிட்ட படத்திற்காக இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சூர்யா-ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்று செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021 என்ற பெயரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. உலகெங்கிலும் வளர்ந்துவரும் தலைவர்களால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதாக வைத்து இந்த விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19ஆம் தேதி இலினொய் மாகாணத்தில் இருக்கின்ற நேபர்வில்லேயில் நடைபெற இருக்கிறது.