வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியக்குமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! 

Photo of author

By Sakthi

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா!
நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தாலும் மோசமான சாதனை ஒன்றை இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார்.
குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று(ஜூன்12) அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறிங்கிய இந்தியா 19வது ஓவரில் 111 ரன்கள் எடுத்து இலக்கை சேஸ் செய்து இந்த தொடரில் தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
நேற்று(ஜூன்12) இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.  இதனால் இந்தியா 39 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ்  மிகவும் பொறுமையாக விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து பொறுமையாக  விளையாடிக் கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவருடைய டி20 வரலாறில் மிஙவும் அதிகமான பந்துகளில் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். மேலும் உலகக் கோப்பை டி20 தொடர்களில் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சூரியகுமார் யாதவ் அவர்களும் இடம் பிடித்துள்ளார்.
அந்த வகையில் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக பந்துகளை சந்தித்து மெதுவாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகம்மது ரிஸ்வான் இந்த வருடம் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 52 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
அவரை தெடர்ந்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் தற்பொழுது நடைபேற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் 50 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தெடரில் 49 பந்துகளை சந்தித்து மெதுவாக அரைசதம் அடித்த டெவான் ஸ்மித் உள்ளார். நான்காம் இடத்தில் 2010ம் ஆண்டு 49 பந்துகளை சந்தித்து மெதுவாக அரைசதம் அடித்த மைக் ஹஸ்ஸி உள்ளார்.
இவர்களின் வரிசையில் இந்த ஆண்டு சூரியகுமார் யாதவ் அவர்கள் 49 பந்துகளை சந்தித்து மிகவும் பொறுமையாக அரைசதம் அடித்து 5ம் இடநனத்தை பிடித்துள்ளார். மேலும் பொறுமையாக அரைசதம் அடித்தாலும் இந்திய அணியை வெற்றி பெற வைத்து உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணியை முன்னேற வைத்துள்ளார்.