சற்றேறக்குறைய 2 வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்று காரணமாக, சரிவர செயல்படாமல் இருந்துவந்தது. அதோடு பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 2020 ஆம் வருடம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் விதித்தனர்.
இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அதோடு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என்று அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தனர்.
பின்பு நோய்த்தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மெல்ல,மெல்ல செயல்படத் தொடங்கினர். ஆனாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில், மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்களின் இல்லத்திற்கே சென்று பாடம் நடத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் முழுமையாக குறைய தொடங்கி வைத்து தொடர்ந்து இந்த வருடம் 10 மற்றும் 11 , 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக, பள்ளிகளை தாமதமாக திறந்திருப்பதால் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

