நோய்த்தொற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனுடைய வீரியமும் அதிகமாகவே இருந்து வருகிறதுஇதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். ஆக்சிஜன் போன்றவற்றை அதிகப்படுத்துவதில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தேன்.
சென்னையில் #COVID19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. pic.twitter.com/YS4tM2wr1j
— M.K.Stalin (@mkstalin) May 27, 2021
அந்த விதத்தில் தமிழக அரசு சார்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வலைப்பதிவில் ஸ்டாம்லி மருத்துவமனையில் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தேன் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது பிற பகுதியில் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.