சிரியா ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!! அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவை எதிர்க்கிறது!!

Photo of author

By Sakthi

Syria: சிரியா நாட்டை தற்போது கிளர்ச்சியாளர்கள் குழு முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

சிரியாவில் உள்நாட்டு போர் என்பது கடத்த 11 அண்டுகளாக நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழு சிரியா  அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போரை நடத்தி வருகிறார்கள். அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா உதவி செய்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹையாத் தாஹாரிர் அல்-ஷாம் அமைப்பிற்கு மறைமுகமாக போர் ஆயுத உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா.

இதன் காரணமாக கிளர்ச்சியாளர்கள் குழு சிரியா அதிபர் ராணுவத்திற்கு எதிராக போரை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றி இருக்கிறார்கள்.  இதனால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் விமானம் மூலம் ரஷ்யா நாட்டிற்கு தப்பித்து சென்று இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஷ்யா நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சிரியா நாட்டில் 50 ஆண்டுகால குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.  இந்த நிலையில் அமெரிக்க வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உடன் நேரடி தொடர்பில் இருப்பதாக அறிவித்து இருக்கிறது.  இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஆண்டனி பிளிங்கன்.

சிரியா நாட்டில் ஏற்பட்டு இருக்கும் புதிய அரசியல் மாற்றத்திற்கு அதரவு கொடுக்க வேண்டும் அரபு நாடுகள் , துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சிரியா அமைதிப் பற்றிய  பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார். அமெரிக்காவின் நேரிடித் தலையீடு  சிரியாவில்   இருப்பதால்  ரஸ்யா ராணுவப்  படைகள் பின் வாங்கி வருகிறது.