ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் தமிழக எதிர்க்கட்சிகள்! அணிவகுப்பு நடைபெறுமா?

0
184

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அந்த கட்சியை தொடங்குவதற்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த அவர் தலைமைக்கு விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தோற்றுவித்து தமிழக அரசியலில் செயல்பட்டு வந்தார். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சமயம் வந்தால் மட்டும் அவரை தன் பக்கம் இணைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வைக்கும்.

வேல்முருகனும் அந்த தேர்தல் சமயத்தில் மட்டும் வன்னியர்களுக்கு நான் பாடுபடுவேன் என்பதை போன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவார் ஆனால் தேர்தல் முடிவுற்றால் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது.

முன்பே சொன்னதைப் போல திமுக வின் கொள்கையும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கொள்கையும் கடவுள் இல்லை என்ற சித்தாந்தமும் இந்து எதிர்ப்புக் கொள்கை என்ற சித்தாந்தமும் கொண்டதுதான் என்பதில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. தேர்தல் சமயம் வந்தால் திமுக என்ன தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடும் என்ற சூழ்நிலை காணப்பட்டாலும் ஒரு சில கட்சிகள் அந்த கட்சியின் கூட்டணிக்கு செல்வதற்கு அறவே விரும்ப மாட்டார்கள்.

ஆனால் ஒரு சில கட்சிகள் திமுக தோல்வியின் விளிம்பிற்கு சென்றாலும் அந்த கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டார்கள் இப்படி இரு குழுக்களாக தமிழக அரசியல் பிரிந்து இருக்கிறது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீகம் தொடர்பான அரசியல் ஒரு பக்கம், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒரு பக்கம் என்று தமிழகத்தில் இரு வேறு அரசியல் நடைபெற்று வருகிறது.

ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் எப்போதுமே கடவுள் இல்லை என்ற சித்தாந்தம் வெற்றி பெற்று விடும் என்பதில் அபார நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

அதாவது இந்து மத நம்பிக்கை அதிகம் கொண்ட ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்தில் தற்போது வளர்ச்சி அடைய தொடங்கியுள்ளது மேலும் பாஜகவும் ஒருபுறம் வளர்ச்சி அடைந்து வருகிறது இது திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கின்றன.

அதன் விளைவாகத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தவருக்கும் அணிவகுப்புக்கு தமிழக அரசு காவல்துறையின் மூலமாக அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு நான்கு வழி சாலை சந்திப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகியின் மகன் சேவா மருத்துவக் கிளினிக்கை திறப்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டசபை உறுப்பினருமான வேல்முருகன் வருகை தந்தார்.

மருத்துவக் கிளினிக்கை திறந்து வைத்து அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் வேல்முருகன். அப்போது சமீப காலமாக உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் அனைத்தும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் பார்வை இருக்கிறது.

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் ஆண்டாண்டு காலமாக சமூக நீதி, சமூக நல்லிணக்கம் மதச் சண்டைகளிலிருந்து பிளவு படாமல் பொறுப்பும், கடமையும் நீதிமன்றங்களிடத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தமிழகத்தில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலங்கள் நடந்தது கிடையாது. தமிழகம் நாட்டிலேயே அமைதியான மாநிலம் அமைதியாக மக்கள் வாழ்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு இஸ்லாமிய கிறிஸ்துவரோடு அன்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். பண்பாட்டில் சிறப்பாக விளங்கும் தமிழகம் மதத்தின் பெயராலோ சாதியின் பெயராலோ கலவரப்படக்கூடாது என்ற சமூக நீதி ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல அதே சமயத்தில் தமிழக அரசு அரசு ஊர்வலம் நடத்தப்படக்கூடாது என்று தடை விதித்தது வரவேற்கத்தக்கது.

அதே சமயத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியை தவிர்த்து மற்ற தேதிகளில் நடத்திக் கொள்ளலாம் என்பது நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பது முன்னுக்குப் பின் முரணான ஒன்று என தெரிவித்துள்ளார்.

சமூக நீதியுடன் மக்கள் வாழ்ந்து வரும் மண் சமூகநீதி காக்கப்படும் என்று சொன்னால் நம்மை ஆளுகின்ற அரசுகள் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் உறுதியாக நின்று இந்த மக்கள் பக்கம் உறுதியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பின் அழுத்தத்திற்கோ ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளின் அழுத்தத்திற்கோ பணியக்கூடாது, இது என்னுடைய வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார் வேல்முருகன்.

எதிர்வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற சமூக நலனுக்கான பேரணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கைகோர்க்கிறது.

மற்ற கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து மத கலவரம் ஏற்படாமல் அமைதியான தமிழகம் சமய நல்லிணக்கத்திற்கு அமைதி வழி, அறவழி, மனித சங்கிலி பேரணி நடைபெறுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பை ஏற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்றுக் கொள்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்

Previous articleஇன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரம்மாண்ட திறப்பு விழா:! பிரதமர் மோடி வருகை!
Next articleஅடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!