டி20 உலகக் கோப்பைத்தொடர்! வீரர்கள் தொடர்பாக விராட் கோலி தெரிவித்த தகவல்!

0
138

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் தற்சமயம் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் ஐம்பத்தி ஒரு ரன்களும் இஷன் கிஷன் 70 ரன்கள் சேர்த்தார். இந்த சூழ்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோகித் சர்மா உள்ளிட்டோர் களம் இறங்குவார்கள் என்று கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக உரையாற்றி இருக்கின்ற கோலி ஐபிஎல் தொடருக்கு முன்பு சூழ்நிலைகள் வேறு மாதிரியாக இருந்தன, தற்சமயம் லோகேஷ் ராகுலை முன் வரிசையில் இருந்து கீழே இறக்குவது கடினமானது. ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நான் மூன்றாவது வரிசையில் களம் இறங்குவேன் என்று தெரிவித்திருக்கின்றார், ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் முதல் ஆட்டத்தில் எவ்வாறு ஆரம்பிக்க இருக்கின்றோம் என்ற அடிப்படையில் நாங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளோம், பயிற்சி ஆட்டத்தில் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும், அவர்களுடைய செயல்பாடுகளை நாங்கள் கவனிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு குழுவாக ஆற்றலையும், நேரத்தையும், உருவாக்குவதுதான் தற்சமயம் யோசனையாக உள்ளது சென்ற காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைந்து இருக்கின்றோம். அதே ஆற்றலை உருவாக்க விருப்பம் கொண்டிருக்கிறோம் என கூறியிருக்கிறார் விராட் கோலி.

இந்த சூழ்நிலையில், அன்னையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பனியின் தாக்கம் ஆட்டத்தில் எதிரொலித்து இருந்தது இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் இரவு நேரத்திலேயே நடக்கின்றது. இதன் காரணமாக தான் பனியின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. டி20 உலகக் கோப்பை போட்டியில் பணியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியில் தேர்வு இருக்கும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார்.

அதோடு டி20 உலகக்கோப்பை போட்டி ஆட்டங்களில் பனியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து முதலில் பேட்டிங் செய்யலாமா அல்லது பந்து வீச்சு செய்யலாமா என்பதை முடிவு செய்வோம் என கூறியிருக்கிறார்.

அதோடு கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது என்பது தொடர்பாகவும், முடிவு செய்வோம். சென்ற இரண்டு மாத காலமாக இங்கே ஐபிஎல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஆகவே அவர்கள் அதிக அளவில் தயாராக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

பயிற்சி ஆட்டத்தில் அனைவரும் பேட்டிங் செய்யலாம், எல்லோரும் பந்து வீசலாம், ஆகவே வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கணிப்பதற்கு அது நமக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், துபாயில் இன்றைய தினம் மாலை நடைபெற இருக்கும் தன்னுடைய இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Previous article“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!
Next articleபிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!