டி20 உலகக் கோப்பை! மண்ணை கவ்விய நியூசிலாந்து அணி!

Photo of author

By Sakthi

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கீழே அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறி வருத்தத்திற்குரியது. இந்த நிலையில், துபாயில் நேற்றைய தினம் இரவு இந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது அதிரடியாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்களை சேர்த்தார்.

இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதேநேரம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். அவர் 38 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

அதேபோல நியூசிலாந்து இன் பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ் மிகவிரைவாக அரைசதம் கடந்ததுடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இன்னொரு முனையில் மேக்ஸ் வெல்லும் பொறுப்புடன் விளையாடினார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலியா அணி ஏழு குழந்தைகள் மீதும் இருந்த சூழ்நிலையில், 173 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. மார்ஷ் 50 பந்துகளில் 27 ரன்கள் உடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள்.

இதன் மூலமாக முதன் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது.

மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதையும், டேவிட் வார்னர் தொடர்நாயகன் விருதையும், மூன்று அரை சதத்துடன் பெற்றிருக்கிறார்கள்.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி விரட்டிப் பிடித்த அதிக பட்ச இலக்கு இதுதான் என்று சொல்லப்படுகிறது, 2010ஆம் வருடத்தின் இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்த ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு ரூபாய் 12 கோடியும், இரண்டாவது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணிக்கு 6 கோடி ரூபாயும், பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.