நோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேர்தல் ஆணையம்! புகார் கிளம்பியதால் பரபரப்பு!

Photo of author

By Sakthi

சமீபகாலமாக தேர்நல் நடைபெறும்போது வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருட்க பட்டிருக்கும் வாக்கு எந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களையும் தாண்டி கடைசியாக நோட்டா என்ற பட்டன் இருக்கும்.

அதாவது இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற மனநிலை கொண்ட வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மோட்டார் குறியீட்டை அழுத்திவிட்டு வருவார்கள்.

இதன் மூலமாக தேர்தலில் ஆர்வமில்லாத மற்றும் வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட வாக்காளர்கள் எத்தனை சதவீதம் பேர் ஒரு தொகுதியில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் கணக்கிட முடிந்தது. அதோடு பொதுமக்களின் தனிப்பட்ட விருப்பத்தில் ஒன்றாகவும் இந்த நோட்டா பட்டன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக நோட்டா வசதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தேர்தலிலேயே நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகள் நாடு முழுவதும் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அதாவது 1.1 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரையும் நிராகரிக்கும் விதத்தில் மோட்டார் வசதி தேவை என்ற குரல் 10 வருடங்களுக்கு முன்னரே எழுந்தது. இதனை வலியுறுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2013 ஆம் வருடத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற விதத்தில் ஒரு பட்டனை தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக 2013ஆம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலைகள் தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் இடம்பெற்ற நோட்டா வசதி இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. இதுகுறித்து அரப்போர் இயக்கம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுவை வழங்கியிருக்கிறது.

அந்த மனுவில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் நோட்டா பட்டனை வைக்காதது ரகசியமாக அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடமிருந்து பறிக்கும் செயல் இது உண்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும், உடனடியாக இந்த நோட்டா பட்டன் வசதியை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி இருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படும் என்று அங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஹரியானாவில் இந்த நடைமுறை இருக்கிறது ஒடிசாவில் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆகவே மாநில தேர்தல் ஆணையம் அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை நிலை நிறுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்ற சூழ்நிலையில், இந்த புகார் எழுந்திருக்கிறது என்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது