டேபிள் டென்னிஸ்! ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்!

Photo of author

By Sakthi

டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் நேற்றையதினம் மூன்றாவது சுற்றில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கின்ற சீனாவின் லாங்மாவை எதிர்த்து விளையாடினார்.

பலமான சீன வீரருக்கு சவால் விடும் வகையில் சரத்கமல் இருக்கின்றார் ஆனாலும் முதல் ஆட்டத்தை சரத் கமல் 7 பதினொன்று என்று இழந்திருந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக ஆடி ஆட்டத்தை 11 க்கு 8 என்று கைப்பற்றினார். மூன்றாவது சுற்றில் கடுமையான நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் 11க்கு 13 என அந்த செட்டை இழந்துவிட்டார்.

நான்காவது சுற்றில் நான்கிற்கு 11 என்றும், ஐந்தாவது சுற்றில் நான்கிற்கு 11 எனவும், இழந்து கடைசியில் ஒன்றிற்கு 4 என தோல்வியடைந்து ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.