அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் சிறப்பம்சங்கள்!
சன்னதியின் முன் மண்டபத்தில் இருக்கின்ற தூணில் ஒரு அங்குல அளவே இருக்கின்ற ஒரு சிறிய அளவிலான விநாயகர் சிலை இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை மற்றும் விரல் நகங்களும் துல்லியமாக தெரியுமாறு மிக நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சமாக இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் இருக்கின்ற ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. … Read more