பெண்களே நோட் பண்ணிக்கோங்க! மகளிர் உரிமை தொகை குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழக அரசானது மகளிர் உரிமை தொகை திட்டத்தினை அறிவித்தது. இந்த பொன்னான திட்டத்தின்  மூலமாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர். இந்த உதவித் தொகையானது தமிழ்நாடு அரசின் மூலம் விண்ணப்பித்த பெண்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

சமீபத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக புதியதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே வாட்ஸ் அப் மற்றும் சமூக இணையதளங்களில்  சில போலியான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சமூக ஊடகங்களின் வாயிலாக மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டிருப்பதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற போலியான செய்தியானது மர்ம நபர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புதிய மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்க ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் வந்தவர்களிடத்தில் இது பொய்யான செய்தி என்று எடுத்துரைத்தபோதும் மக்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர். மேற்கொண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் அறிவிப்பின்படி மகளிர் உரிமை தொகை தொடர்பான முடிவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் குறித்து மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்படும் நாளானது அரசால் அறிவிக்கப்படும் வரை யாரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் அப்பேட்டியில் விளக்கியுள்ளார்.