இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!

Photo of author

By Sakthi

இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!

Sakthi

மதுரை சுலைமான் பகுதியில் இருக்கின்ற கள்ளம்பல் வில்வ நாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பாக கடந்த ஏழாம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.

அதன் பிறகு மகா சுசீந்திரன் தெரிவிக்கும் போது இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காக ஒரு சில கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுயலாபத்திற்காக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். அவர்களுடைய இந்த செயலை நாங்கள் இனியும் பொறுக்க மாட்டோம் இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனை துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்று பேசி இருந்தார். என்ற பேச்சு பரபரப்பை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இப்படியான நிலையில், நாக்கு வெட்டப்படும் என்று பேசிய விவகாரத்தில் பாஜகவின் செயலாளர் மகா சுசீந்திரனின் மீது சிலைமான் காவல்துறையினர் பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம் ஒழுங்கு அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதத்தில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.