அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்.. இவர்களுக்கெல்லாம் உதவித்தொகை உயர்வு!! எப்போதிலிருந்து தெரியுமா??

0
158
tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars
tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars

நேற்று சென்னை பல்கலைகழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட நூறு மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தற்போதைய  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன் அவர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு சில இனிமையான செய்திகளை வழங்கியுள்ளார். அவரின் கூற்றுப்படி,  வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும், இறந்த தமிழறிஞர்களின் ஈம காரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும் அடுத்த ஆண்டு முதல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்வளர்ச்சித்துறையின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வருடந்தோறும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய திட்டத்தின் மூலம் உதவித்தொகையும் மருத்துவப்படியும் கொடுக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட  ஐம்பத்து எட்டு வயது நிரம்பிய தமிழறிஞர்களால் தனது வாழ்நாள் முழுவதும் பயனடைய முடியும். ஆனால் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருத்தல் அவசியம். கொடுக்கப்பட்ட வரம்புகளைப் பெற்றிருக்கும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களால் உதவித்தொகையாக ரூ.3,500 ஐயும், மருத்துவப்படியாக ரூ. 500 ஐயும் ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.

மேற்கண்ட உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்வளர்ச்சித்துறையின் இணையதள முகவரியை அணுகவும். மேலும் விண்ணப்பப் படிவத்தை  நேரடியாக அலுவலகத்தில் பெற்றுகொள்ளுங்கள் அல்லது கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி பெற்றுவந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் உயிரிழந்த பிறகு ஈம காரியத்திற்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தமிழறிஞர்கள் தங்களது வருமானச் சான்றிதழை தாசில்தாரின் அலுவலகத்தின் மூலம் இணைய வழியில் பெற்றிருக்க வேண்டும். மேலும் சில குறிப்பிட்ட ஆவணங்களைக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றி வருபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.

Previous articleஅண்ணாமலை சொன்னது சரியாக போச்சு.. திமுக ஸ்ரீ ராம ஜெயம் என சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு!! 
Next articleஅவரை காப்பாற்ற வேண்டாம்! மனைவி கூறிய பதில்! அதிர்ச்சியில் டாக்டர்கள்!