கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்!! பள்ளி அதிகாரிகள் திடீர் உத்தரவு!!
கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக தொடங்க வேண்டும் அதாவது அமல்படுத்த வேண்டும் என்று பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு 2015 – 16ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த சட்டம் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை மட்டுமே அமலானது. வரும் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் தமிழ் மொழி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா, மற்றும் இராணுவத் துறையின் சைனிக் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அமல் படுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அனைதது பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்குவது பற்றி “தமிழக அரசின் உத்தரவுப்படி கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என்றால் அங்கு தமிழ் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
எனவே தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தமிழ் மொழி வகுப்புகளை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ் பாட வேளையோ ஆசிரியரோ இல்லாமல் இருக்கக்கூடாது. தமிழ் மொழிக்கான பாடத்திட்டம் தமிழக கல்வித் துறையால் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் தமிழ் தேர்வு நடத்தப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.