லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே !!

0
76
#image_title
லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சி இருக்கின்றது என்று ரசிகர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்
சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்தார்.
இதையடுத்து இந்த படம் போலவே தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்கள் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகள் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், விஜய் சேதுபதி, அஜித் நடித்த திரைப்படங்களில் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லியோ போல பொய்யான பிளேஷ்பேக் காட்சிகள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்கள்…
நடிகர் அஜித் நடித்த வாலி…
நடிகர் அஜித், நடிகை சிம்ரன், நடிகை ஜோதிகா ஆகியோரது நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ஆகும். வாலி திரைப்படத்தை தற்பொழுது நடிகராக உள்ள எஸ்.ஜே சூரியா அவர்கள் இயக்கியிருந்தார். இரண்டு வேடங்களில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்த வாலி திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் சிம்ரன் அவர்களிடம் செல்லும் காதல் கதை பொய்யானது தான்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி…
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படம் ஆகும். விருமாண்டி திரைப்படத்தில் மதுரைக்காரன் கதாப்பாத்தியமாக அப்படியே நடித்திருப்பவர். தற்பொழுது வரை கொண்டாடப்படும் விருமாண்டி திரைப்படத்தில் நடிகர் பசுபதி அவர்கள் கூறும் பிளேஷ்பேக் கட்சிகள் பொய்யானது. இதை சிறிதும் கூட சந்தேகம் வராத அளவுக்கு நடிகராக இருக்கும் இயக்குநர் கமல்ஹாசன் அவர்கள் சிறப்பாக  காட்சிபடுத்தியிருப்பார்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மன்மதன்…
நடிகர் சிலம்பரசன் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் அது மன்மதன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அதுல் குல்கர்னி, கவுண்டமணி, ஜோதிகா, சிந்து தொலானி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிலம்பரசன் அவர்கள் இந்த திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். மன்மதன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஜெ முருகன் அவர்கள் மன்மதன் திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சியை வைத்து அற்புதமாக கையாண்டு இருப்பார்.
விஜய் சேதுபதி நடித்த பீட்சா…
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பீட்சா திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். பீட்சா திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் முன்னரே இந்த திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சியை வைத்து சிறப்பாக கையாண்டு இருப்பார்.