தமிழகத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற பத்தாம் தேதி வெளியீடு??

0
140

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வி துறையால் உத்தரவிடப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் உயர் கல்வி துறையால் வெளியிடப்பட்ட இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற பத்தாம் தேதி காலை 9.30மணிக்கு தேர்வு முடிவுகள் கீழ்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்படும் என்றும் கூறியுள்ளது.வருகின்ற 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் அவர்களது பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிப்பெண் சார்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவர்கள் பயிலும் பள்ளிகள் மூலம் குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று தேர்வு கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Previous articleபள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!
Next articleசவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு